182. ஆனால், மரணசாசனம் கூறியவரி(ன் சாசனத்தி)ல் அநீதம் அல்லது தவறு இருப்பதை எவரேனும் பார்த்து பயந்து, அ(ந்த சாசனப் பொருளை அடையக்கூடிய)வர்களுக்கிடையே சமாதானம் செய்து அதை மாற்றிவிட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க கருணையாளன் ஆவான்.
الترجمة التاميلية
فَمَنۡ خَافَ مِن مُّوصٖ جَنَفًا أَوۡ إِثۡمٗا فَأَصۡلَحَ بَيۡنَهُمۡ فَلَآ إِثۡمَ عَلَيۡهِۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
ஆனால் வஸிய்யத்து செய்பவரிடம்(பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மன முரண்டான அநீதமோ இருப்பதையஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து (அந்த வஸிய்யத்தை)சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும்; நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான்.
Jan Trust Foundation - Tamil translation
எவர் மரணசாசனம் கூறுபவரிடத்தில் அநீதி அல்லது தவறைப் பயந்து, அவர்களுக்கு மத்தியில் சீர்திருத்தத்தை செய்தாரோ அவர் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
الترجمة التاميلية - عمر شريف