199. பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற (‘முஸ்தலிபா' என்னும்) இடத்திலிருந்து நீங்களும் (‘மினா'வுக்குத்) திரும்பி விடுங்கள். மேலும், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.
الترجمة التاميلية
ثُمَّ أَفِيضُواْ مِنۡ حَيۡثُ أَفَاضَ ٱلنَّاسُ وَٱسۡتَغۡفِرُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
பிறகு மக்கள் புறப்படுகிற இடத்திலிருந்து புறப்படுங்கள்; அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
الترجمة التاميلية - عمر شريف