236. பெண்களின் மஹரைக் குறிப்பிடாமல் (திருமணம் செய்து) அவர்களுடன் நீங்கள் வீடு கூடாமல் தலாக்குக் கூறிவிட்டாலும் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்கு ஏதும் கொடுத்துப் பயனடையச் செய்யவும். பணக்காரன் தன் தகுதிக்கேற்பவும், ஏழை தன் சக்திக்கேற்பவும் கண்ணியத்தோடு (அவர்களுக்குக் கொடுத்து) பயனடையச் செய்யவேண்டியது நல்லோர் மீது கடமையாகும்.
الترجمة التاميلية
لَّا جُنَاحَ عَلَيۡكُمۡ إِن طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ مَا لَمۡ تَمَسُّوهُنَّ أَوۡ تَفۡرِضُواْ لَهُنَّ فَرِيضَةٗۚ وَمَتِّعُوهُنَّ عَلَى ٱلۡمُوسِعِ قَدَرُهُۥ وَعَلَى ٱلۡمُقۡتِرِ قَدَرُهُۥ مَتَٰعَۢا بِٱلۡمَعۡرُوفِۖ حَقًّا عَلَى ٱلۡمُحۡسِنِينَ
பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் - அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும்.
Jan Trust Foundation - Tamil translation
பெண்களை நீங்கள் விவாகரத்து செய்தால் - அவர்களை நீங்கள் தொடாமல் இருக்கும்போது அல்லது அவர்களுக்கு மஹ்ரை நிர்ணயிக்காமல் இருக்கும்போது - (அது) உங்கள் மீது குற்றமே இல்லை. அவர்களுக்கு நல்ல முறையில் பொருள் கொடுங்கள். செல்வந்தர் மீது அவருடைய அளவு(க்கு)ம் ஏழை மீது அவருடைய அளவு(க்கு)ம் கடமையாகும். நல்லறம் புரிவோர் மீது (இது) கடமையாகும்.
الترجمة التاميلية - عمر شريف