24. நீங்கள் அவ்விதம் (கொண்டுவர) இயலாது போனால் - உங்களால் நிச்சயம் அவ்வாறு செய்ய முடியாது - மனிதர்களும் கற்களும் இரையாகின்ற (நரக) நெருப்புக்குப் பயந்து கொள்ளுங்கள். அது நிராகரிப்பவர்களுக்கென தயார் செய்யப்பட்டுள்ளது.
الترجمة التاميلية
فَإِن لَّمۡ تَفۡعَلُواْ وَلَن تَفۡعَلُواْ فَٱتَّقُواْ ٱلنَّارَ ٱلَّتِي وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلۡحِجَارَةُۖ أُعِدَّتۡ لِلۡكَٰفِرِينَ
(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால், அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது, மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.
Jan Trust Foundation - Tamil translation
நீங்கள் (அப்படி) செய்யவில்லையென்றால், - நீங்கள் செய்யவே மாட்டீர்கள் - மக்களும் கற்களும் அதன் எரிபொருளாக இருக்கிற (நரக) நெருப்பை அஞ்சுங்கள். அது நிராகரிப்பாளர்களுக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.
الترجمة التاميلية - عمر شريف