247. மேலும், அவர்களுடைய நபி அவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசராக அனுப்பியிருக்கிறான்'' என்று கூறியதற்கு (அவர்கள்) ‘‘எங்கள் மீது அரசாலும் உரிமை அவருக்கு எவ்வாறு ஏற்படும். அவரை விட நாங்கள்தான் அரசாட்சி புரிய மிகத் தகுதியுடையவர்கள், (அரசாட்சி புரிவதற்கு அவசியமான) திரளான செல்வத்தையும் அவர் அடையவில்லை'' என்று கூறினார்கள். (அதற்கு அவர்களுடைய நபி) ‘‘நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (ஆட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அன்றி (போர்க்) கல்வியிலும், உட(ல் ஆற்ற)லிலிலிலும் உங்களைவிட அவரை அதிகப்படுத்தியும் இருக்கிறான். அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கே தன் ஆட்சியை வழங்குவான். அல்லாஹ் (வழங்குவதில்) அதிக விசாலமானவன், (அரசாட்சி புரியத் தகுதியுடையவர்களை) நன்கறிந்தவன்'' என்று கூறினார்.
الترجمة التاميلية
وَقَالَ لَهُمۡ نَبِيُّهُمۡ إِنَّ ٱللَّهَ قَدۡ بَعَثَ لَكُمۡ طَالُوتَ مَلِكٗاۚ قَالُوٓاْ أَنَّىٰ يَكُونُ لَهُ ٱلۡمُلۡكُ عَلَيۡنَا وَنَحۡنُ أَحَقُّ بِٱلۡمُلۡكِ مِنۡهُ وَلَمۡ يُؤۡتَ سَعَةٗ مِّنَ ٱلۡمَالِۚ قَالَ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰهُ عَلَيۡكُمۡ وَزَادَهُۥ بَسۡطَةٗ فِي ٱلۡعِلۡمِ وَٱلۡجِسۡمِۖ وَٱللَّهُ يُؤۡتِي مُلۡكَهُۥ مَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ
அவர்களுடைய நபி அவர்களிடம் "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்" என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், "எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே!" என்று கூறினார்கள்; அதற்கவர், "நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்" என்று கூறினார்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்களுடைய நபி, "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசராக அனுப்பியிருக்கிறான்'' என்று அவர்களுக்குக் கூறினார்.”எங்கள் மீது ஆட்சி (செலுத்த) அவருக்கு (தகுதி) எப்படி இருக்கும்? அவரைவிட நாங்கள் ஆட்சிக்கு மிகவும் தகுதியுடையவர்கள். அவர் செல்வத்தின் வசதி கொடுக்கப்படவில்லையே'' என்று (அம்மக்கள்) கூறினார்கள். "நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (ஆட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்தான். (போர்க்) கல்வியிலும், உடலிலும் ஆற்றலை அவருக்கு அதிகம் கொடுத்திருக்கிறான். "அல்லாஹ், தான் நாடியவருக்கே தனது ஆட்சியைத் தருவான். அல்லாஹ் விசாலமானவன். மிக அறிபவன்'' என்று (தூதர்) கூறினார்.
الترجمة التاميلية - عمر شريف