261. (நபியே!) அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களைச் செலவு செய்கிறவர்களுடைய (பொருள்களின்) உதாரணம், ஒரு வித்தின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அ(ந்த வித்)து ஏழு கதிர்களைத் தந்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள் (ஆக, எழுநூறு வித்துக்கள் அந்த ஒரு வித்திலிருந்து) உற்பத்தியாயின. அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு (இதை மேலும்,) இரட்டிப்பாக்குகிறான். ஏனெனில், அல்லாஹ் (வழங்குவதில்) மிக விசாலமானவன், நன்கறிந்தவன்.
الترجمة التاميلية
مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِي كُلِّ سُنۢبُلَةٖ مِّاْئَةُ حَبَّةٖۗ وَٱللَّهُ يُضَٰعِفُ لِمَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களை தர்மம் புரிபவர்களின் உதாரணம், ஏழு கதிர்களை முளைக்க வைத்த ஒரு விதையின் உதாரணத்தைப் போன்றதாகும். ஒவ்வொரு கதிரிலும் நூறு விதை(கள் வந்தன). அல்லாஹ், தான் நாடுபவர்களுக்கு (நற்கூலியை)ப் பன்மடங்காக்குகிறான். அல்லாஹ் விசாலமானவன், மிக அறிந்தவன்.
الترجمة التاميلية - عمر شريف