270. (நன்மைக்காக உங்கள்) பொருளிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தபோதிலும் அல்லது நீங்கள் என்ன நேர்ச்சை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிகிறான். மேலும், (நேர்ச்சை செய்தபின் அதை நிறைவேற்றாத) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவருமே) இல்லை.
الترجمة التاميلية
وَمَآ أَنفَقۡتُم مِّن نَّفَقَةٍ أَوۡ نَذَرۡتُم مِّن نَّذۡرٖ فَإِنَّ ٱللَّهَ يَعۡلَمُهُۥۗ وَمَا لِلظَّـٰلِمِينَ مِنۡ أَنصَارٍ
இன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்.
Jan Trust Foundation - Tamil translation
தர்மத்தில் எதை நீங்கள் தர்மம் புரிந்தாலும் அல்லது நேர்ச்சையில் எதை நேர்ந்து கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் ஒருவருமே இல்லை.
الترجمة التاميلية - عمر شريف