272. (நபியே! மனிதர்களுக்கு நேரான வழியை அறிவிப்பதுதான் உங்கள் கடமை.) நேரான வழியில் அவர்களைச் செலுத்துவது உங்கள் கடமையல்ல. ஆயினும், அல்லாஹ், தான் நாடியவர்களையே நேரான வழியில் செலுத்துகிறான். (நம்பிக்கையாளர்களே!) நல்லதிலிருந்து நீங்கள் எதை செலவு செய்தபோதிலும் அது உங்களுக்கே (நன்மையாக அமையும்). அல்லாஹ்வின் முகத்தைத் தேடுவதற்கே தவிர, (பெருமைக்காக) நீங்கள் (எதையும்) செலவு செய்யாதீர்கள். (பெருமையை நாடாமல்) நன்மைக்காக எதைச் செலவு செய்தபோதிலும் அதன் கூலியை நீங்கள் முழுமையாக அடைவீர்கள், (அதில்) உங்களுக்கு அநீதி இழைக்கப்படமாட்டாது.
الترجمة التاميلية
۞لَّيۡسَ عَلَيۡكَ هُدَىٰهُمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ يَهۡدِي مَن يَشَآءُۗ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ فَلِأَنفُسِكُمۡۚ وَمَا تُنفِقُونَ إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ ٱللَّهِۚ وَمَا تُنفِقُواْ مِنۡ خَيۡرٖ يُوَفَّ إِلَيۡكُمۡ وَأَنتُمۡ لَا تُظۡلَمُونَ
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்;. இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்;. அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்;. நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே) அவர்களை நேர்வழி செலுத்துவது உம் மீது (பொறுப்பு) அல்ல. என்றாலும் அல்லாஹ், தான் நாடியவரை நேர்வழி செலுத்துகிறான். செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும் (அது) உங்களுக்கே (நன்மை). அல்லாஹ்வின் முகத்தை நாடியே தவிர, (புகழுக்காக) நீங்கள் தர்மம் செய்யாதீர்கள். (புகழை நாடாமல்) செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் புரிந்தாலும் அது உங்களுக்கு முழு (நன்)மையாக நிறைவேற்றப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
الترجمة التاميلية - عمر شريف