33. (பின்னர் இறைவன்) “ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக!'' எனக் கூறினான். அவர் அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அறிவித்தபொழுது அவன் (வானவர்களை நோக்கி) “பூமியிலும் வானங்களிலும் (உங்களுக்கு) மறைவானவற்றை நிச்சயமாக நான் நன்கறிபவன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? ஆகவே, நீங்கள் (ஆதமை பற்றி) வெளியிட்டதையும், மறைத்துக் கொண்டதையும் நிச்சயமாக நான் (நன்கு) அறிவேன்'' என்றான்.
الترجمة التاميلية
قَالَ يَـٰٓـَٔادَمُ أَنۢبِئۡهُم بِأَسۡمَآئِهِمۡۖ فَلَمَّآ أَنۢبَأَهُم بِأَسۡمَآئِهِمۡ قَالَ أَلَمۡ أَقُل لَّكُمۡ إِنِّيٓ أَعۡلَمُ غَيۡبَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَأَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا كُنتُمۡ تَكۡتُمُونَ
"ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது "நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?" என்று (இறைவன்) கூறினான்.
Jan Trust Foundation - Tamil translation
"ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக'' எனக் கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் அறிவித்தபோது, "வானங்கள் இன்னும் பூமியின் மறைவானவற்றை நிச்சயமாக நான் அறிவேன்; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைத்திருந்ததையும் அறிவேன்'' என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா? எனக் கூறினான்.
الترجمة التاميلية - عمر شريف