49. மேலும், உங்களுக்குத் தீய நோவினை செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை விடுவித்தோம். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு உங்கள் பெண் (பிள்ளை)களை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். அதில் உங்கள் இறைவனுடைய ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.
الترجمة التاميلية
وَإِذۡ نَجَّيۡنَٰكُم مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَسُومُونَكُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِ يُذَبِّحُونَ أَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُونَ نِسَآءَكُمۡۚ وَفِي ذَٰلِكُم بَلَآءٞ مِّن رَّبِّكُمۡ عَظِيمٞ
உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்) அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு சோதனை இருந்தது.
Jan Trust Foundation - Tamil translation
ஃபிர்அவ்னுடைய கூட்டத்திடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சமயத்தை நினைவு கூருங்கள். உங்களுக்கு தீய வேதனையால் சிரமம் தந்தார்கள். உங்கள் ஆண் பிள்ளைகளை அறுத்தார்கள். உங்கள் பெண் (பிள்ளை)களை வாழ விட்டார்கள். அதில் உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரிய சோதனை இருந்தது.
الترجمة التاميلية - عمر شريف