54. இன்னும் (நினைத்துப் பாருங்கள்:) மூஸா தன் சமூகத்தாரை நோக்கி “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டதனால் (பகுத்தறிவுடைய) நீங்கள் (கேவலம் ஒரு மிருகத்தை வணங்கி) உண்மையாகவே உங்களுக்கு தீங்கிழைத்துக் கொண்டீர்கள். நீங்கள் மனம் வருந்தி உங்களை படைத்தவனிடம் மீண்டு உங்(களிலுள்ள வரம்பு மீறியவர்)களை நீங்களே கொன்று விடுங்கள். இதுதான் உங்களை படைத்தவனிடம் உங்களுக்கு நன்மை தரும்'' என்று கூறினார். ஆகவே, (அவ்வாறே நீங்களும் செய்ததனால்) உங்களை (அல்லாஹ்) மன்னித்து விட்டான். நிச்சயமாக அவன்தான் மிக மன்னிப்பவன், மகாக் கருணையாளன் ஆவான்.
الترجمة التاميلية
وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ إِنَّكُمۡ ظَلَمۡتُمۡ أَنفُسَكُم بِٱتِّخَاذِكُمُ ٱلۡعِجۡلَ فَتُوبُوٓاْ إِلَىٰ بَارِئِكُمۡ فَٱقۡتُلُوٓاْ أَنفُسَكُمۡ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ عِندَ بَارِئِكُمۡ فَتَابَ عَلَيۡكُمۡۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
மூஸா தம் சமூகத்தாரை நோக்கி "என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்" எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.
Jan Trust Foundation - Tamil translation
மூசா தன் சமுதாயத்திற்கு, "என் சமுதாயமே! நீங்கள் காளைக்கன்றை(த்தெய்வமாக) எடுத்துக் கொண்டதினால், நிச்சயமாக நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்கு அநியாயம் செய்தீர்கள். எனவே, (பாவத்தை விட்டு விலகி) உங்களைப் படைத்தவனின் பக்கம் திரும்புங்கள்; உங்கள் உயிர்களைக் கொல்லுங்கள். அது உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்குச் சிறந்ததாகும்'' என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். எனவே, (நீங்கள் உங்களைக் கொன்றவுடன்) (அல்லாஹ்) உங்களை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் தவ்பாவை அங்கீகரிப்பவன், பேரன்பாளன்.
الترجمة التاميلية - عمر شريف