55. மேலும், நீங்கள் மூஸாவை நோக்கி “நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாக காணும்வரை உங்களை நம்பவே மாட்டோம்'' என்று கூறியபொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களை (பூகம்பம் போன்ற) பெரும் சப்தம் பிடித்துக் கொண்டது.
الترجمة التاميلية
وَإِذۡ قُلۡتُمۡ يَٰمُوسَىٰ لَن نُّؤۡمِنَ لَكَ حَتَّىٰ نَرَى ٱللَّهَ جَهۡرَةٗ فَأَخَذَتۡكُمُ ٱلصَّـٰعِقَةُ وَأَنتُمۡ تَنظُرُونَ
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.
Jan Trust Foundation - Tamil translation
மூசாவே "அல்லாஹ்வை நாம் கண்கூடாக காணும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று நீங்கள் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். எனவே, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க பெரும் சப்தம் உங்களைப் பிடித்தது.
الترجمة التاميلية - عمر شريف