58. மேலும், (உங்கள் மூதாதையர்களை நோக்கி) “நீங்கள் இந்த நகருக்கு சென்று அதில் உங்களுக்கு விருப்பமான இடத்தில் (விருப்பமானவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் (நுழையும்பொழுது) தலை குனிந்து செல்லுங்கள்; ‘ஹித்ததுன்' (எங்கள் பாவச்சுமை நீங்குக!) எனவும் கூறுங்கள். உங்கள் குற்றங்களை நாம் மன்னித்து விடுவோம். நன்மை செய்தவர்களுக்கு (அதன் கூலியை) அதிகப்படுத்தியும் கொடுப்போம்'' எனக் கூறியிருந்தோம்.
الترجمة التاميلية
وَإِذۡ قُلۡنَا ٱدۡخُلُواْ هَٰذِهِ ٱلۡقَرۡيَةَ فَكُلُواْ مِنۡهَا حَيۡثُ شِئۡتُمۡ رَغَدٗا وَٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا وَقُولُواْ حِطَّةٞ نَّغۡفِرۡ لَكُمۡ خَطَٰيَٰكُمۡۚ وَسَنَزِيدُ ٱلۡمُحۡسِنِينَ
இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; " இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.
Jan Trust Foundation - Tamil translation
"நீங்கள் இந்த ஊரில் நுழையுங்கள்; அதில் நீங்கள் நாடிய விதத்தில் தாராளமாகப் புசியுங்கள்; (அதன்) வாசலில் தலைகுனிந்தவர்களாக நுழையுங்கள்; (எங்கள்) பாவச்சுமை நீங்குக! எனக் கூறுங்கள்; உங்கள் குற்றங்களை உங்களுக்கு மன்னிப்போம், நல்லறம் புரிவோருக்கு (நன்மையை மேலும்) அதிகப்படுத்துவோம்'' என நாம் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்.
الترجمة التاميلية - عمر شريف