69. அதற்கவர்கள் “அதன் நிறம் என்னவென்று அறிவிக்கும்படி நீர் உமது இறைவனைக் கேட்பீராக!'' என்றார்கள். (அதற்கு மூஸா) “அது பார்ப்பவர் மனதைக் கவரக்கூடிய கலப்பற்ற மஞ்சள் நிறமான மாடு என அவன் கூறுகிறான்'' என்றார்.
الترجمة التاميلية
قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوۡنُهَاۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ صَفۡرَآءُ فَاقِعٞ لَّوۡنُهَا تَسُرُّ ٱلنَّـٰظِرِينَ
"அதன் நிறம் யாது!" என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!" என அவர்கள் கூறினார்கள்;. அவர் கூறினார்; "திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்" என்று மூஸா கூறினார்.
Jan Trust Foundation - Tamil translation
"எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அதன் நிறம் என்னஎன்று விவரிப்பான்'' எனக் கூறினார்கள். நிச்சயமாக அது மஞ்சள் நிறமான பசு; அதன் நிறம் தூய்மையானது (கலப்பற்றது); அது பார்ப்பவர்களை மகிழ்விக்கும்'' என நிச்சயமாக அவன் கூறுகிறான் என (மூசா) கூறினார்.
الترجمة التاميلية - عمر شريف