70. அதற்கவர்கள் நிச்சயமாக அம்மாடு (எது என) எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது. அது எது? (வேலை செய்து பழகியதா) என எங்களுக்கு விவரித்து அறிவிக்கும்படி உமது இறைவனைக் கேட்பீராக. அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாங்கள் (இவ்விஷயத்தில்) நேர்வழி பெற்றுவிடுவோம்'' எனக் கூறினார்கள்.
الترجمة التاميلية
قَالُواْ ٱدۡعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَ إِنَّ ٱلۡبَقَرَ تَشَٰبَهَ عَلَيۡنَا وَإِنَّآ إِن شَآءَ ٱللَّهُ لَمُهۡتَدُونَ
"உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன, அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்" என்று அவர்கள் கூறினார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
"எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அது எது (வேலைக்கு பயன்படுத்தப்பட்டதா இல்லையா)? என எங்களுக்கு அவன் விவரிப்பான். மாடுகள் எங்களுக்கு குழப்பமாகிவிட்டன. நிச்சயமாக நாங்கள் அல்லாஹ் நாடினால் திட்டமாக நேர்வழி பெறுவோம்'' எனக் கூறினார்கள்.
الترجمة التاميلية - عمر شريف