71. (அதற்கு மூஸா) “நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, அதில் அறவே வடுவில்லாத குறையற்ற ஒரு மாடு'' என்று அவன் கூறுகிறான் என்றார். (அதற்கு) அவர்கள் ''இப்பொழுதுதான் நீர் சரியான விவரம் கொண்டு வந்தீர்'' எனக் கூறிய பின்னும் அவர்கள் அறுக்க மனமின்றியே அதை அறுத்தார்கள்.
الترجمة التاميلية
قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٞ لَّا ذَلُولٞ تُثِيرُ ٱلۡأَرۡضَ وَلَا تَسۡقِي ٱلۡحَرۡثَ مُسَلَّمَةٞ لَّا شِيَةَ فِيهَاۚ قَالُواْ ٱلۡـَٰٔنَ جِئۡتَ بِٱلۡحَقِّۚ فَذَبَحُوهَا وَمَا كَادُواْ يَفۡعَلُونَ
அவர்(மூஸா)"நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது, ஆரோக்கியமானது, எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்" எனக் கூறினார். "இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்" என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
"நிச்சயமாக அது நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தப்படாத, (விளை) நிலத்திற்கு நீர் இறைக்காத பசு; குறையற்றது; அதில் வடு அறவே இல்லை'' என்று அவன் கூறுகிறான் என (மூசா) கூறினார். "இப்போதுதான் உண்மையைக் கொண்டு வந்தீர்'' எனக் கூறி அதை அறுத்தார்கள். அவர்கள் (அதை விரைவாக) செய்ய நெருங்கவில்லை.
الترجمة التاميلية - عمر شريف