75. (நம்பிக்கையாளர்களே!) உங்(கள் வார்த்தை)களுக்காக இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? அல்லாஹ்வின் வசனத்தைக் கேட்டு அதை நன்கு புரிந்த பின்னரும், (அதன் சரியான பொருளை) அறிந்துகொண்டே அதை மாற்றிவிடும் ஒரு பிரிவினரும் அவர்களில் இருந்தனர்.
الترجمة التاميلية
۞أَفَتَطۡمَعُونَ أَن يُؤۡمِنُواْ لَكُمۡ وَقَدۡ كَانَ فَرِيقٞ مِّنۡهُمۡ يَسۡمَعُونَ كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ يُحَرِّفُونَهُۥ مِنۢ بَعۡدِ مَا عَقَلُوهُ وَهُمۡ يَعۡلَمُونَ
(முஸ்லிம்களே!) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா? இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
உங்களுக்காக அவர்கள் நம்பிக்கை கொள்வதை ஆசைப்படுகிறீர்களா? திட்டமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய பேச்சை செவியுறுகின்றனர். பிறகு, அதை அவர்கள் சிந்தித்து புரிந்த பின்னர் அவர்கள் அறிந்தே அதை மாற்றுகின்றனர்.
الترجمة التاميلية - عمر شريف