90. (இந்த குர்ஆனை தங்கள் மீது இறக்காமல்) அல்லாஹ் தன் அடியார்களில், தான் விரும்பியவர்கள் மீது தன் அருளை இறக்கி வைத்ததைப்பற்றி பொறாமைகொண்டு, அல்லாஹ் இறக்கிவைத்த (இ)தையே நிராகரிப்பதன் மூலமாக அவர்கள் தங்களுக்காக எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (குர்ஆனைத் தங்கள் மீது இறக்கவில்லையென்ற) கோபத்தினால் (அதை நிராகரித்து அல்லாஹ்வின்) கோபத்தில் அவர்கள் சார்ந்து விட்டார்கள். ஆதலால், (அந்)நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
الترجمة التاميلية
بِئۡسَمَا ٱشۡتَرَوۡاْ بِهِۦٓ أَنفُسَهُمۡ أَن يَكۡفُرُواْ بِمَآ أَنزَلَ ٱللَّهُ بَغۡيًا أَن يُنَزِّلَ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦۖ فَبَآءُو بِغَضَبٍ عَلَىٰ غَضَبٖۚ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٞ مُّهِينٞ
தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது (வேதம் எனும்) தன் அருளில் இருந்து இறக்குவதைப் பொறாமைப்பட்டு, அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை நிராகரித்து அவர்கள் தங்களை எதற்குப் பகரமாக விற்றார்களோ அது (மிகக்) கெட்டது. (தவ்றாத்தை செயல்படுத்தாததால் அவர்கள் மீதிருந்த அல்லாஹ்வின்) கோபத்திற்கு மேல் (குர்ஆனையும் இந்த நபியையும் நிராகரித்து மேலும் அல்லாஹ்வின்) கோபத்தில் அவர்கள் சார்ந்தார்கள். நிராகரிப்பாளர்களுக்கு இழிவு தரக்கூடிய வேதனையுண்டு.
الترجمة التاميلية - عمر شريف