165. (நம்பிக்கையாளர்களே! ‘‘பத்ரு' போரில்) இதைவிட இருமடங்கு சிரமத்தை நீங்கள் அவர்களுக்கு உண்டு பண்ணியிருந்தும் இந்த சிரமம் (உஹுத் போரில்) உங்களுக்கு ஏற்பட்ட சமயத்தில் இது எப்படி (யாரால்) ஏற்பட்டது? என நீங்கள் கேட்(க ஆரம்பித்துவிட்)டீர்கள். (நீங்கள் செய்த தவறின் காரணமாக) உங்களால்தான் இது ஏற்பட்டதென்றும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் என்றும் (நபியே!) கூறுவீராக.
الترجمة التاميلية
أَوَلَمَّآ أَصَٰبَتۡكُم مُّصِيبَةٞ قَدۡ أَصَبۡتُم مِّثۡلَيۡهَا قُلۡتُمۡ أَنَّىٰ هَٰذَاۖ قُلۡ هُوَ مِنۡ عِندِ أَنفُسِكُمۡۗ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
இன்னும் உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம் வந்துற்றபோது, நீங்கள் (பத்ரில்) அவர்களுக்கு இது போன்று இருமடங்குத் துன்பம் உண்டு பண்ணியிருந்த போதிலும், "இது எப்படி வந்தது?" என்று கூறுகிறீர்கள். (நபியே!) நீர் கூறும்; இது (வந்தது) உங்களிடமிருந்தேதான் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்,"
Jan Trust Foundation - Tamil translation
நம்பிக்கையாளர்கள் மீது திட்டமாக அல்லாஹ் அருள் புரிந்தான். ஏனெனில், அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு மத்தியில் அனுப்பினான். அவர்கள் மீது அவனுடைய வசனங்களை (அவர்) ஓதுகிறார்; அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். நிச்சயமாக (அவர்கள் இதற்கு) முன்னர் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர்.
الترجمة التاميلية - عمر شريف