46. மேலும், ‘‘அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும் பொழுது (தன் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றியு)ம், (தன் நபித்துவத்தைப் பற்றி) வாலிபத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர, நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராகவும் இருப்பார்'' (என்றும் கூறினார்கள்.)
الترجمة التاميلية
وَيُكَلِّمُ ٱلنَّاسَ فِي ٱلۡمَهۡدِ وَكَهۡلٗا وَمِنَ ٱلصَّـٰلِحِينَ
"மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்."
Jan Trust Foundation - Tamil translation
"அவர் தொட்டிலில் இருக்கும்போதும், வாலிபராக இருக்கும்போதும் மக்களிடம் பேசுவார். இன்னும் (அவர்) நல்லோரில் உள்ளவர்'' (என்றும் வானவர்கள் கூறினார்கள்).
الترجمة التاميلية - عمر شريف