173. அல்லது (பொய்யான தெய்வங்களை) இணையாக்கியதெல்லாம் (நாங்களல்ல;) எங்களுக்கு முன் சென்றுபோன எங்கள் மூதாதைகள்தான். நாங்களோ அவர்களுக்குப் பின்னர் வந்த அவர்களுடைய சந்ததிகள். ஆகவே, (அவர்களை நாங்கள் பின்பற்றினோம்.) அவர்கள் செய்த தகாத காரியங்களுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?'' என்று கூறாதிருப்பதற்காகவே (இதை நாம் ஞாபக மூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)
الترجمة التاميلية
أَوۡ تَقُولُوٓاْ إِنَّمَآ أَشۡرَكَ ءَابَآؤُنَا مِن قَبۡلُ وَكُنَّا ذُرِّيَّةٗ مِّنۢ بَعۡدِهِمۡۖ أَفَتُهۡلِكُنَا بِمَا فَعَلَ ٱلۡمُبۡطِلُونَ
அல்லது, "இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?" என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)
Jan Trust Foundation - Tamil translation
அல்லது இணைவைத்ததெல்லாம் முன்னர் எங்கள் மூதாதைகள்தான். (நாங்கள்) அவர்களுக்குப் பின்னர் (தோன்றிய) சந்ததிகளாக இருக்கிறோம். (அந்த) பொய்யர்கள் செய்ததற்காக நீ எங்களை அழிப்பாயா?” என்று கூறாதிருப்பதற்காக... (இதை இன்று நினைவூட்டுகிறோம்).
الترجمة التاميلية - عمر شريف