203. (அவர்கள் விருப்பப்படி) ஒரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டு வராவிட்டால் (அதற்குப் பதிலாகத் தங்கள் விருப்பப்படி கற்பனையாக ஒரு வசனத்தை அமைத்து) ‘‘இதை நீர் வசனமாக எடுத்துக்கொள்ள வேண்டாமா?'' என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவனால் எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நான் பின்பற்றுகிறேன். இதுவோ உங்கள் இறைவனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட நல்லறிவாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழியாகவும், (இறைவனின்) அருளாகவும் இருக்கிறது.
الترجمة التاميلية
وَإِذَا لَمۡ تَأۡتِهِم بِـَٔايَةٖ قَالُواْ لَوۡلَا ٱجۡتَبَيۡتَهَاۚ قُلۡ إِنَّمَآ أَتَّبِعُ مَا يُوحَىٰٓ إِلَيَّ مِن رَّبِّيۚ هَٰذَا بَصَآئِرُ مِن رَّبِّكُمۡ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ
நீர் (அவர்களின் விருப்பப்படி) அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வராவிட்டால், "நீர் இந்த அத்தாட்சியை ஏன் கொண்டு வரவில்லை?" என்று கேட்பார்கள்; (நீர் கூறும்;) நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதைத்தான்; (திருக்குர்ஆன் ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த அறிவொளியாகவும், நேர்வழியாகவும், நல்லருளாகவும் இருக்கின்றது - நம்பிக்கை கொண்ட மக்களுக்கு.
Jan Trust Foundation - Tamil translation
(அவர்கள் விரும்புகிற) ஒரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டு வரவில்லையென்றால் “அதை நீர் தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமா?” என்று கூறுகின்றனர். (நபியே!) கூறுவீராக: “நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத்தான். இது உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டுள்ள தெளிவான ஆதாரங்கள் ஆகும்; நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு இது நேர்வழியும், (அல்லாஹ்வின்) கருணையுமாகும்.
الترجمة التاميلية - عمر شريف