38. (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ஜின்களிலும், மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட (உங்களைப் போன்ற பாவிகளான) கூட்டத்தினருடன் நீங்களும் சேர்ந்து நரகத்திற்குச் சென்று விடுங்கள்'' என்று கூறுவான். அவர்களில் ஒவ்வொரு வகுப்பினரும் (நரகத்திற்குச்) சென்றபொழுது (முன்னர் அங்கு வந்துள்ள) தங்கள் இனத்தாரை கோபித்து சபிப்பார்கள். (இவ்வாறு) இவர்கள் அனைவரும் நரகத்தையடைந்த பின்னர், (அவர்களில்) பின் சென்றவர்கள் (தங்களுக்கு) முன் சென்றவர்களைச் சுட்டிக்காட்டி, ‘‘எங்கள் இறைவனே! இவர்கள்தான் எங்களை வழி கெடுத்தார்கள். ஆகவே, அவர்களுக்கு (எங்களைவிட) இரு மடங்கு நரக வேதனையைக் கொடுப்பாயாக!'' என்று கூறுவார்கள். அதற்கு அவன், ‘‘உங்களில் அனைவருக்குமே இரு மடங்கு வேதனை உண்டு. எனினும் (இதன் காரணத்தை) நீங்கள் அறியமாட்டீர்கள்'' என்று கூறுவான்.
الترجمة التاميلية
قَالَ ٱدۡخُلُواْ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِكُم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ فِي ٱلنَّارِۖ كُلَّمَا دَخَلَتۡ أُمَّةٞ لَّعَنَتۡ أُخۡتَهَاۖ حَتَّىٰٓ إِذَا ٱدَّارَكُواْ فِيهَا جَمِيعٗا قَالَتۡ أُخۡرَىٰهُمۡ لِأُولَىٰهُمۡ رَبَّنَا هَـٰٓؤُلَآءِ أَضَلُّونَا فَـَٔاتِهِمۡ عَذَابٗا ضِعۡفٗا مِّنَ ٱلنَّارِۖ قَالَ لِكُلّٖ ضِعۡفٞ وَلَٰكِن لَّا تَعۡلَمُونَ
(அல்லாஹ்) கூறுவான்; "ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்." ஒவ்வொரு கூட்டத்தாரும், நரகத்தில் நுழையும்போதெல்லாம், (தங்களுக்கு முன், அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப்பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தையடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப்பற்றி, "எங்கள் இறைவனே! இவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள்; ஆதலால் இவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு" என்று சொல்வார்கள். அவன் கூறுவான்; "உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு - ஆனால் நீங்கள் அதை அறியமாட்டீர்கள்."
Jan Trust Foundation - Tamil translation
ஜின்களிலும், மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட (பாவிகளான) கூட்டங்களில் (இணைந்து) நரகத்தில் நுழையுங்கள்” என்று (அல்லாஹ்) கூறுவான். ஒரு கூட்டம் (நரகத்தில்) நுழையும்போதெல்லாம் அது தன் சக கூட்டத்தை சபிக்கும். இறுதியாக, அதில் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அவர்களில் பின் வந்த கூட்டம் தங்கள் முன்சென்ற கூட்டத்தை சுட்டிக் காண்பித்து “எங்கள் இறைவா! இவர்கள்தான் எங்களை வழி கெடுத்தனர். எனவே, அவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு!” என்று கூறும். “(உங்களில்) எல்லோருக்குமே இருமடங்கு (வேதனை) உண்டு. எனினும் அறியமாட்டீர்கள்” என்று (அல்லாஹ்) கூறுவான்.
الترجمة التاميلية - عمر شريف