73. ‘ஸமூத்' (என்னும்) மக்களிடம் அவர்களுடைய சகோதரர் ‘ஸாலிஹை' (நம் தூதராக அனுப்பிவைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். உங்களுக்கு அவனைத்தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. (இதற்காக) உங்கள் இறைவனிடம் இருந்து தெளிவான ஓர் அத்தாட்சியும் உங்களிடம் வந்திருக்கிறது. இது அல்லாஹ்வுடைய ஒட்டகமாகும். (இது) உங்களுக்கோர் அத்தாட்சியாகவும் இருக்கிறது. ஆகவே, அதை அல்லாஹ்வுடைய பூமியில் (எங்கும் தடையின்றி தாராளமாக) மேய விடுங்கள். அதற்கு எத்தகைய தீங்கும் செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்'' என்று கூறினார்.
الترجمة التاميلية
وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمۡ صَٰلِحٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥۖ قَدۡ جَآءَتۡكُم بَيِّنَةٞ مِّن رَّبِّكُمۡۖ هَٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمۡ ءَايَةٗۖ فَذَرُوهَا تَأۡكُلۡ فِيٓ أَرۡضِ ٱللَّهِۖ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابٌ أَلِيمٞ
ஸமூது' கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார்.
Jan Trust Foundation - Tamil translation
‘ஸமூது’ (சமுதாயத்தினரு)க்கு அவர்களுடைய சகோதரர் ‘ஸாலிஹ்’ ஐ (அனுப்பி வைத்தோம்). “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி வணங்கப்படும் (எந்த) ஒரு கடவுளும் உங்களுக்கில்லை. உங்கள் இறைவனிடம் இருந்து ஓர் அத்தாட்சி உங்களிடம் வந்துவிட்டது. இது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக (வந்த) அல்லாஹ்வுடைய ஒட்டகமாகும். ஆகவே, அதை (தொந்தரவின்றி) விட்டு விடுங்கள், அல்லாஹ்வுடைய பூமியில் அது (சுற்றித்திரிந்து) மேயும். அதை தீமையைக் கொண்டு தொடாதீர்கள். (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடிக்கும்”என்று (அவர்) கூறினார்.
الترجمة التاميلية - عمر شريف