82. அதற்கு அவருடைய மக்கள் (தங்கள் இனத்தாரை நோக்கி, லூத் நபியைச் சுட்டிக் காண்பித்து) ‘‘இவரையும் இவர் குடும்பத்தையும், உங்கள் ஊரிலிருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். நிச்சயமாக இவர்கள் மிகப் பரிசுத்தமான மனிதர்களாகிவிடலாமெனப் பார்க்கின்றனர்'' என்றுதான் பதில் கூறினார்கள்.
الترجمة التاميلية
وَمَا كَانَ جَوَابَ قَوۡمِهِۦٓ إِلَّآ أَن قَالُوٓاْ أَخۡرِجُوهُم مِّن قَرۡيَتِكُمۡۖ إِنَّهُمۡ أُنَاسٞ يَتَطَهَّرُونَ
நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.
Jan Trust Foundation - Tamil translation
“இவர்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுங்கள். நிச்சயமாக இவர்கள் சுத்தமான மனிதர்கள்”என்று அவர்கள் கூறியது தவிர அவருடைய சமுதாயத்தினரின் பதில் (வேறு) இருக்கவில்லை.
الترجمة التاميلية - عمر شريف