142. (நபியே! ‘‘முஸ்லிம்கள்) முன்நோக்கி வந்த கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பி விட்டது எது?'' என மனிதர்களில் சில அறிவீனர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘கிழக்குத் திசையும் மேற்குத் திசையும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துவான்.''
الترجمة التاميلية
۞سَيَقُولُ ٱلسُّفَهَآءُ مِنَ ٱلنَّاسِ مَا وَلَّىٰهُمۡ عَن قِبۡلَتِهِمُ ٱلَّتِي كَانُواْ عَلَيۡهَاۚ قُل لِّلَّهِ ٱلۡمَشۡرِقُ وَٱلۡمَغۡرِبُۚ يَهۡدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
மக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்; "(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது?" என்று. (நபியே!) நீர் கூறும்; "கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை, தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்" என்று.
Jan Trust Foundation - Tamil translation
"அவர்கள் (தொழுது கொண்டு) இருந்த அவர்களின் கிப்லாவை விட்டு அவர்களைத் திருப்பியது எது?'' என (முஸ்லிம்களைப் பற்றி) மக்களில் உள்ள அறிவீனர்கள் கூறுவார்கள். (அதற்கு) கூறுவீராக! "கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் நாடுகிறவர்களை நேரான பாதைக்கு நேர்வழி காட்டுகிறான்.''
الترجمة التاميلية - عمر شريف