207. அல்லாஹ்வின் (திருப்)பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன் உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது மிகவும் இறக்கமுடையவன்.
الترجمة التاميلية
وَمِنَ ٱلنَّاسِ مَن يَشۡرِي نَفۡسَهُ ٱبۡتِغَآءَ مَرۡضَاتِ ٱللَّهِۚ وَٱللَّهُ رَءُوفُۢ بِٱلۡعِبَادِ
இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்;. அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடி, (தன் செல்வத்தைக் கொடுத்து) தன் உயிரையே விற்பவரும் மக்களில் உண்டு. அல்லாஹ் அடியார்கள் மீது மிக இரக்கமுடையவன் ஆவான்.
الترجمة التاميلية - عمر شريف