218. எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்களும்; எவர்கள் (நிராகரிப்பாளர்களின் துன்பத்தால் ‘மக்கா'வாகிய) தம் ஊரைவிட்டும் வெளியேறினார்களோ அவர்களும்; எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறார்களோ அவர்களும்தான் அல்லாஹ்வின் கருணையை நிச்சயமாக எதிர்பார்க்கின்றனர். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
الترجمة التاميلية
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَاجَرُواْ وَجَٰهَدُواْ فِي سَبِيلِ ٱللَّهِ أُوْلَـٰٓئِكَ يَرۡجُونَ رَحۡمَتَ ٱللَّهِۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ
நம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்;. மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள் இன்னும் ஹிஜ்ரத் செய்து, அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாது செய்தவர்கள் அவர்கள் அல்லாஹ்வுடைய கருணையை ஆதரவு வைக்கிறார்கள். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.
الترجمة التاميلية - عمر شريف