228. ‘தலாக்' கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் வரும் வரை எதிர்பார்த்திருக்கவும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப்பையில் (சிசுவை) படைத்திருந்தால் அதை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானது அல்ல. தவிர (‘ரஜயி'யான தலாக்குக் கூறப்பட்ட) அப்பெண்களின் கணவர்கள் (சேர்ந்து வாழக் கருதி, தவணைக்குள்) சமாதானத்தை விரும்பினால் அவர்களை (மனைவிகளாக)த் திருப்பிக்கொள்ள (அக்கணவர்கள்) மிகவும் உரிமையுடையவர்கள். (ஆகவே, மறுவிவாகமின்றியே மனைவியாக்கிக் கொள்ளலாம். ஆண்களுக்கு) முறைப்படி பெண்களின் மீதுள்ள உரிமைகள் போன்றதே (ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு. ஆயினும், ஆண்களுக்குப் பெண்கள் மீது (ஓர்) உயர் பதவி உண்டு. அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவு உடையவன் ஆவான்.
الترجمة التاميلية
وَٱلۡمُطَلَّقَٰتُ يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ ثَلَٰثَةَ قُرُوٓءٖۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكۡتُمۡنَ مَا خَلَقَ ٱللَّهُ فِيٓ أَرۡحَامِهِنَّ إِن كُنَّ يُؤۡمِنَّ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَٰلِكَ إِنۡ أَرَادُوٓاْ إِصۡلَٰحٗاۚ وَلَهُنَّ مِثۡلُ ٱلَّذِي عَلَيۡهِنَّ بِٱلۡمَعۡرُوفِۚ وَلِلرِّجَالِ عَلَيۡهِنَّ دَرَجَةٞۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு. கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்களை எதிர்பார்ப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கிறவர்களாக இருந்தால் அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப்பைகளில் படைத்ததை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதில்லை. அவர்களின் கணவர்கள் இணக்கத்தை விரும்பினால் அதில் (தவணைக்குள்) அவர்களை மீட்டிக்கொள்வதற்கு உரிமையுடையவர்கள். (பெண்களாகிய) அவர்கள் மீது (கடமை) இருப்பது போன்றே அவர்களுக்கு (உரிமையு)ம் உண்டு. ஆண்களுக்கு அவர்கள் மீது ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.
الترجمة التاميلية - عمر شريف