246. (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளில் மூஸாவுக்குப் பின் இருந்த தலைவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள்) ‘‘அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரிய எங்களுக்கு(த் தலைமை வகிக்கின்ற) ஓர் அரசனை அனுப்பிவைப்பீராக!'' என்று தங்கள் நபியிடம் கூறியபோது, (அவர்) ‘‘போர் செய்வது உங்கள் மீது விதிக்கப்பட்டால் நீங்கள் போர் செய்யாமல் (விலகி) இருந்து விடுவீர்களா?'' என்று கேட்டார். (அதற்கு) அவர்கள் ‘‘எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்க, (எங்களை வெளியேற்றிய) அவர்களிடம் அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் செய்யாதிருக்க எங்களுக்கென்ன நேர்ந்தது?'' என்று கூறினார்கள். ஆனால், போர் செய்யும்படி கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள் போர் செய்யாது) பின் சென்றுவிட்டார்கள். (இத்தகைய) அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிவான்.
الترجمة التاميلية
أَلَمۡ تَرَ إِلَى ٱلۡمَلَإِ مِنۢ بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ مِنۢ بَعۡدِ مُوسَىٰٓ إِذۡ قَالُواْ لِنَبِيّٖ لَّهُمُ ٱبۡعَثۡ لَنَا مَلِكٗا نُّقَٰتِلۡ فِي سَبِيلِ ٱللَّهِۖ قَالَ هَلۡ عَسَيۡتُمۡ إِن كُتِبَ عَلَيۡكُمُ ٱلۡقِتَالُ أَلَّا تُقَٰتِلُواْۖ قَالُواْ وَمَا لَنَآ أَلَّا نُقَٰتِلَ فِي سَبِيلِ ٱللَّهِ وَقَدۡ أُخۡرِجۡنَا مِن دِيَٰرِنَا وَأَبۡنَآئِنَاۖ فَلَمَّا كُتِبَ عَلَيۡهِمُ ٱلۡقِتَالُ تَوَلَّوۡاْ إِلَّا قَلِيلٗا مِّنۡهُمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّـٰلِمِينَ
(நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்; "நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்" என்று கூறிய பொழுது அவர், "போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?" என்று கேட்டார்; அதற்கவர்கள்; "எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?" எனக் கூறினார்கள்;. எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.
Jan Trust Foundation - Tamil translation
மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீ-ன் சந்ததிகளைச் சேர்ந்த தலைவர்களை நீர் கவனிக்கவில்லையா? "எங்களுக்கு ஓர் அரசரை அனுப்புவீராக! அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரிவோம்'' என்று தங்களுக்குரிய நபிக்கு அவர்கள் கூறியபோது. "போர் உங்கள் மீது கடமையாக்கப்பட்டால் நீங்கள் போர் புரியாமல் இருக்கக்கூடுமா?'' என்று கூறினார். "அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரியாதிருக்க எங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நாங்கள் எங்கள் இல்லங்கள் இன்னும் எங்கள் சந்ததிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளோம்'' என்று கூறினார்கள். போர் அவர்கள் மீது கடமையாக்கப்பட்டபோது அவர்களில் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள் போரை விட்டு) விலகினார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
الترجمة التاميلية - عمر شريف