249. பின்னர், தாலூத் படைகளைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டபொழுது அவர் (தன் இராணுவத்தை நோக்கி) ‘‘நிச்சயமாக (நீங்கள் செல்லும் வழியில்) அல்லாஹ் ஓர் ஆற்றைக் கொண்டு உங்களைச் சோதிப்பான். (உங்களில்) எவர் அதிலிருந்து தனது கைக்கொண்டு ஒரு உள்ளங்கை அளவு நீரைவிட அதிகமாகக் குடிக்கவில்லையோ அவர்தான் என்னைச் சார்ந்தவர். எவர் அதிலிருந்து (அதற்கதிகமாகக்) குடிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல'' எனக் கூறினார். ஆனால், (ஆற்றைக் கடக்கவே) அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாகக்) குடித்து விட்டார்கள். பின்னர், அவர் (தம்முடன் இருந்த) நம்பிக்கையாளர்களுடன் அதைக் கடந்து சென்ற பொழுது, (அதிகமாகக் குடித்த அவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய இராணுவத்துடனும் ‘‘இன்று (போர் புரிய) எங்களுக்குச் சக்தியில்லை'' என்று கூறி (விலகி) விட்டார்கள். (ஆனால், அவர்களில்) எவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என உறுதி கொண்டிருந்தார்களோ அவர்கள் மற்றவர்களை நோக்கி ‘‘(எவ்வளவோ) பெரும் கூட்டத்தினரை எத்தனையோ சிறு கூட்டத்தினர் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்'' என்று கூறினார்கள்.
الترجمة التاميلية
فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِٱلۡجُنُودِ قَالَ إِنَّ ٱللَّهَ مُبۡتَلِيكُم بِنَهَرٖ فَمَن شَرِبَ مِنۡهُ فَلَيۡسَ مِنِّي وَمَن لَّمۡ يَطۡعَمۡهُ فَإِنَّهُۥ مِنِّيٓ إِلَّا مَنِ ٱغۡتَرَفَ غُرۡفَةَۢ بِيَدِهِۦۚ فَشَرِبُواْ مِنۡهُ إِلَّا قَلِيلٗا مِّنۡهُمۡۚ فَلَمَّا جَاوَزَهُۥ هُوَ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ قَالُواْ لَا طَاقَةَ لَنَا ٱلۡيَوۡمَ بِجَالُوتَ وَجُنُودِهِۦۚ قَالَ ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَٰقُواْ ٱللَّهِ كَم مِّن فِئَةٖ قَلِيلَةٍ غَلَبَتۡ فِئَةٗ كَثِيرَةَۢ بِإِذۡنِ ٱللَّهِۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّـٰبِرِينَ
பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர்; "நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்" என்று கூறினார்; அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்;. பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) "ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை" என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், "எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்;. மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்" என்று கூறினார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
தாலூத் படைகளுடன் புறப்பட்டபோது, "நிச்சயமாக அல்லாஹ் ஓர் ஆற்றின் மூலம் உங்களைச் சோதிப்பான். ஆகவே, எவர் அதிலிருந்து குடித்தாரோ அவர் என்னைச் சேர்ந்தவரில்லை. எவர் அதைச் சுவைக்கவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சேர்ந்தவர். தன் கரத்தால் கையளவு நீர் அள்ளியவரைத் தவிர. (அந்தளவு குடிப்பது அவர் மீது குற்றமில்லை.) அவர்களில் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதிலிருந்து குடித்தார்கள். அவரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் அதைக் கடந்தபோது, (அதிகம் பருகியவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய படைகளுடனும் (போர்புரிய) இன்று எங்களுக்கு அறவே சக்தியில்லை என்று கூறி (விலகி)னார்கள். நிச்சயமாக தாங்கள் அல்லாஹ்வைச் சந்திப்பவர்கள் என அறிந்தவர்கள், "அதிகமான கூட்டத்தை எத்தனையோ குறைவான கூட்டம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு வென்றுள்ளன. அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்'' என்று கூறினார்கள்.
الترجمة التاميلية - عمر شريف