25. (நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (அதில் கூறப்பட்டுள்ளபடி) நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு (சொர்க்கத்தில்) நிச்சயமாக சோலைகள் உண்டு என்று நீர் நற்செய்தி கூறுவீராக. அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டே இருக்கும். அவற்றிலிருந்து (அவர்களுக்கு) ஒரு கனி புசிக்கக் கொடுக்கப்படும் போதெல்லாம் முன்னர் நமக்குக் கொடுக்கப்பட்டதும் இதுதானே! என (ஆச்சரியப்பட்டுக்)கூறுவார்கள். (ஏனென்றால்) பார்வைக்கு ஒரேவிதமாகத் தோன்றக்கூடியவற்றையே கொடுக்கப் பெறுவார்கள். (எனினும் அவை சுவையில் விதவிதமாக இருக்கும்.) பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு கிடைப்பார்கள். மேலும், அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
الترجمة التاميلية
وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ أَنَّ لَهُمۡ جَنَّـٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ كُلَّمَا رُزِقُواْ مِنۡهَا مِن ثَمَرَةٖ رِّزۡقٗا قَالُواْ هَٰذَا ٱلَّذِي رُزِقۡنَا مِن قَبۡلُۖ وَأُتُواْ بِهِۦ مُتَشَٰبِهٗاۖ وَلَهُمۡ فِيهَآ أَزۡوَٰجٞ مُّطَهَّرَةٞۖ وَهُمۡ فِيهَا خَٰلِدُونَ
(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் "இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களுக்கு நிச்சயமாக சொர்க்கங்கள் உண்டு என்று நற்செய்தி கூறுவீராக. அவற்றின் கீழிருந்து ஆறுகள் ஓடும். அவற்றிலிருந்து (ஏதேனும்) ஒரு கனியின் உணவு அவர்களுக்கு வழங்கப்படும் போதெல்லாம் "இது முன்னர் நமக்கு வழங்கப்பட்டதுதான்'' எனக் கூறுவார்கள். (பார்வைக்கு) ஒரே விதமாகத் தோன்றக்கூடியதாகவே அவர்களிடம் அதைக் கொண்டு வரப்படும். தூய்மையான மனைவிகளும் அவற்றில் அவர்களுக்கு உண்டு. அவர்கள் அவற்றில் நிரந்தரமானவர்கள்.
الترجمة التاميلية - عمر شريف