259. (நபியே!) அல்லது ஒரு கிராமத்தை கடந்து சென்றவரைப்போல் (நீர் பார்த்திருக்கின்றீரா? அவர்) அ(க்கிராமத்)திலுள்ள (வீடுகளின்) முகடுகளெல்லாம் இடிந்து (பாழாய்க்) கிடக்க(க் கண்டு) ‘‘இவ்வூர் (மக்கள் இவ்வாறு அழிந்து) இறந்த பின் அல்லாஹ் இதை எப்படி உயிர்ப்பிப்பான்?'' என்று கூறினார். ஆகவே, (அவருடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக) அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் வரை மரணித்திருக்கச்செய்து பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரை நோக்கி ‘‘இந்நிலையில்) நீர் எவ்வளவு காலம் இருந்தீர்'' எனக்கேட்க ‘‘ஒருநாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் இருந்தேன்'' எனக் கூறினார். (அதற்கு அவன்) ‘‘அல்ல! நீர் நூறு ஆண்டுகள் (இந்நிலையில்) இருந்தீர். (இதோ!) உமது உணவையும், உமது பானத்தையும் பார்ப்பீராக!. (அவை இதுவரை) கெட்டுப்போகவில்லை. (ஆனால்) உமது கழுதையைப் பார்ப்பீராக. (அது செத்து மக்கி எலும்பாகக் கிடக்கிறது.) இன்னும் உம்மை(ப் போல் சந்தேகிக்கும்) மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (கழுதையின்) எலும்புகளையும் நீர் பார்ப்பீராக. எப்படி அவற்றைக் கூடாகச் சேர்த்து அதன் மீது மாமிசத்தை அமைக்கிறோம் என்று கூறி (அவ்வாறே உயிர்ப்பித்துக் காட்டி)னான். (இவை அனைத்தும்) அவர் முன் தெளிவாக நடைபெற்றபோது “நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன் என்பதை நான் உறுதியாக அறிந்து கொண்டேன்'' என்று அவர் கூறினார்.
الترجمة التاميلية
أَوۡ كَٱلَّذِي مَرَّ عَلَىٰ قَرۡيَةٖ وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحۡيِۦ هَٰذِهِ ٱللَّهُ بَعۡدَ مَوۡتِهَاۖ فَأَمَاتَهُ ٱللَّهُ مِاْئَةَ عَامٖ ثُمَّ بَعَثَهُۥۖ قَالَ كَمۡ لَبِثۡتَۖ قَالَ لَبِثۡتُ يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖۖ قَالَ بَل لَّبِثۡتَ مِاْئَةَ عَامٖ فَٱنظُرۡ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمۡ يَتَسَنَّهۡۖ وَٱنظُرۡ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجۡعَلَكَ ءَايَةٗ لِّلنَّاسِۖ وَٱنظُرۡ إِلَى ٱلۡعِظَامِ كَيۡفَ نُنشِزُهَا ثُمَّ نَكۡسُوهَا لَحۡمٗاۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥ قَالَ أَعۡلَمُ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன. (இதைப் பார்த்த அவர்) "இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?" என்று (வியந்து) கூறினார்;. ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழுப்படிச் செய்து, "எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?" என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்" என்று கூறினார்; "இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை, ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்) இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்" எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது, அவர், "நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்" என்று கூறினார்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லது ஒரு கிராமத்தை - அது (வசிப்பாரற்று) தன் முகடுகள் மீது விழுந்திருக்க - (அதைக்) கடந்தவரைப் போன்று. (அவரை நீர் பார்த்தீரா?) "இதை அது இறந்த பின்னர் அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிப்பான்?'' என்றார் (அவர்). அல்லாஹ் அவருக்கு நூறு ஆண்டு(கள்) வரை மரணத்தைக் கொடுத்து பிறகு அவரை உயிர்ப்பித்து, "நீர் எத்தனை (காலம்) தங்கினீர்?'' எனக் கேட்க, "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு தங்கினேன்'' எனக் கூறினார். "மாறாக! நீ நூறு ஆண்டு(கள்) தங்கினாய். உன் உணவையும், உன் பானத்தையும் பார். அவை கெட்டுப் போகவில்லை. உன் கழுதையைப் பார். (அது செத்து மக்கிவிட்டது.) உம்மை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்). (கழுதையின்) எலும்புகளைப் பார்; எவ்வாறு அவற்றை அசைத்து (சிலதிற்கு மேல் சிலதை) உயர்த்துகிறோம்; பிறகு அதற்கு மாமிசத்தைப் போர்த்துகிறோம்'' என்று கூறினான். அவருக்கு (இது) தெளிவானபோது, "நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை(க் கண்கூடாக) அறிகிறேன்'' என்று கூறினார்.
الترجمة التاميلية - عمر شريف