280. மேலும், (கடன் வாங்கியவன் அதைத் தவணைப்படி தீர்க்க முடியாமல்) அவன் சிரமத்திலிருந்தால் (அவனுக்கு) வசதி ஏற்படும் வரை எதிர்பார்த்திருங்கள். மேலும், (இதிலுள்ள நன்மைகளை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (அதை அவனுக்கே) நீங்கள் தானம் செய்து விடுவது (பிறருக்கு தானம் செய்வதைவிட) உங்களுக்கு மிகவும் நன்மையாகும்.
الترجمة التاميلية
وَإِن كَانَ ذُو عُسۡرَةٖ فَنَظِرَةٌ إِلَىٰ مَيۡسَرَةٖۚ وَأَن تَصَدَّقُواْ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ
அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்;. இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.
Jan Trust Foundation - Tamil translation
வறியவன் (கடன் வாங்கி) இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசமளித்தல் வேண்டும். (நன்மையை) நீங்கள் அறிந்திருந்தால் (அதை அவனுக்கே) நீங்கள் தர்மம் செய்வது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
الترجمة التاميلية - عمر شريف