36. எனினும், (இப்லீஸாகிய) ஷைத்தான் அதை காரணமாக வைத்து, அவ்விருவரையும் தவறிழைக்கும்படிச் செய்து, (சொர்க்கத்திலிருந்தும்) அவ்விருவரும் இருந்த (மேலான) நிலைமையிலிருந்தும் அவர்களை வெளியேறும்படி செய்துவிட்டான். ஆகவே, (அவர்களை நோக்கி) “உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர். (சொர்க்கத்திலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கு பூமியில்தான் வசிக்க இடமுண்டு. அதில் சிறிது காலம் வரை சுகமும் அனுபவிக்கலாம்'' என நாம் கூறினோம்.
الترجمة التاميلية
فَأَزَلَّهُمَا ٱلشَّيۡطَٰنُ عَنۡهَا فَأَخۡرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِۖ وَقُلۡنَا ٱهۡبِطُواْ بَعۡضُكُمۡ لِبَعۡضٍ عَدُوّٞۖ وَلَكُمۡ فِي ٱلۡأَرۡضِ مُسۡتَقَرّٞ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ
இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், "நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு" என்று கூறினோம்.
Jan Trust Foundation - Tamil translation
ஷைத்தான் அவ்விருவரை அதிலிருந்து பிறழச் செய்தான்; அவ்விருவர் இருந்ததிலிருந்து அவ்விருவரை வெளியேற்றினான். "நீங்கள் இறங்குங்கள் உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர். உங்களுக்குப் பூமியில் வசிக்குமிடமும் ஒரு காலம் வரை இன்பமும் உண்டு'' எனக் கூறினோம்.
الترجمة التاميلية - عمر شريف