41. நான் இறக்கிய (இவ்வேதத்)தை நீங்கள் நம்புங்கள். இது உங்களிடமுள்ள (‘தவ்றாத்' என்னும் வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கிறது. இதை நிராகரிப்பவர்களில் நீங்களே முதன்மையானவர்களாக ஆகிவிட வேண்டாம். (இவ்வேதத்தைப் பற்றி உங்களிடமுள்ள ‘தவ்றாத்'தில் கூறப்பட்டுள்ள) என் வசனங்களை (மாற்றிச்) சொற்ப விலைக்கு விற்றுவிட வேண்டாம். நீங்கள் (மற்ற எவருக்கும் பயப்படாது) எனக்கே பயப்படுங்கள்.
الترجمة التاميلية
وَءَامِنُواْ بِمَآ أَنزَلۡتُ مُصَدِّقٗا لِّمَا مَعَكُمۡ وَلَا تَكُونُوٓاْ أَوَّلَ كَافِرِۭ بِهِۦۖ وَلَا تَشۡتَرُواْ بِـَٔايَٰتِي ثَمَنٗا قَلِيلٗا وَإِيَّـٰيَ فَٱتَّقُونِ
இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது, நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.
Jan Trust Foundation - Tamil translation
உங்களிடமுள்ளதை உண்மைப்படுத்தக்கூடியதாக நான் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள்; அதை நிராகரிப்பவர்களில் முதலாமவர்களாக ஆகிவிடாதீர்கள்; என் வசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள்; என்னையே அஞ்சுங்கள்.
الترجمة التاميلية - عمر شريف