45. (எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே தவிர (மற்றவர்களுக்கு) மிகப்பளுவாகவே இருக்கும்.
الترجمة التاميلية
وَٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى ٱلۡخَٰشِعِينَ
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
Jan Trust Foundation - Tamil translation
நீங்கள் பொறுத்திருந்தும் தொழுதும் (அல்லாஹ்விடம்) உதவி கோருங்கள். நிச்சயமாக அது பளுவானதுதான், உள்ளச்சமுடையோர் மீதே தவிர.
الترجمة التاميلية - عمر شريف