6. (நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை மனமுரண்டாக) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாதிருப்பதும் உண்மையில் சமமே. அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
الترجمة التاميلية
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ سَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ
நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் - அவர்களை நீர் எச்சரித்தாலும் அல்லது அவர்களை நீர் எச்சரிக்கவில்லையென்றாலும் (அது) அவர்கள் மீது சமம்தான் - நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف