7. (அவர்கள் மனமுரண்டாக நிராகரித்ததன் காரணமாக) அவர்களுடைய உள்ளங்களின் மீதும், கேள்விப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களுடைய பார்வைகளின் மீதும் திரையிடப்பட்டு விட்டது. தவிர, அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு.
الترجمة التاميلية
خَتَمَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ وَعَلَىٰ سَمۡعِهِمۡۖ وَعَلَىٰٓ أَبۡصَٰرِهِمۡ غِشَٰوَةٞۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ
அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான்;, இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது, மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.
Jan Trust Foundation - Tamil translation
அவர்களின் உள்ளங்கள் மீதும், அவர்களின் கேள்விப் புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டான். அவர்களின் பார்வைகள் மீதும் திரையிருக்கிறது. இன்னும் அவர்களுக்கு பெரிய வேதனை உண்டு.
الترجمة التاميلية - عمر شريف