73. ஆகவே, அவர்களை நோக்கி (நீங்கள் அதை அறுத்து) ''அதில் ஒரு பாகத்தைக் கொண்டு (கொலையுண்ட) அவனை அடியுங்கள்'' என நாம் கூறினோம். (அவ்வாறு அடித்தவுடன் இறந்தவன் உயிர்பெற்றெழுந்து கொலையாளியை அறிவித்தான். அவன் உயிர்பெற்ற) இவ்வான்ற இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். மேலும், நீங்கள் அறிந்துகொள்வதற்காக அவன் தன் (ஆற்றலை அறிவிக்கக்கூடிய) அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டுகிறான்.
الترجمة التاميلية
فَقُلۡنَا ٱضۡرِبُوهُ بِبَعۡضِهَاۚ كَذَٰلِكَ يُحۡيِ ٱللَّهُ ٱلۡمَوۡتَىٰ وَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ
"(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலை யுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்" என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்.
Jan Trust Foundation - Tamil translation
எனவே, "அதில் சில (பாகத்)தைக்கொண்டு அவரை அடியுங்கள்.'' எனக் கூறினோம். அப்படியே, இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். நீங்கள் சிந்தித்து புரிவதற்காக தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்.
الترجمة التاميلية - عمر شريف