74. இதற்குப் பின்னும் உங்கள் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப் போல் அல்லது அவற்றைவிடக் கடினமானவையாக இருக்கின்றன. (ஏனென்றால்) கற்பாறைகளிலும் தொடர்ந்து (தானாகவே) ஊற்றுகள் உதித்தோடிக் கொண்டிருப்பவையும் நிச்சயமாக உண்டு. பிளந்து அதிலிருந்து நீர் புறப்படக்கூடியவையும் அவற்றில் உண்டு. அல்லாஹ்வுடைய பயத்தால் (மலை மீதிருந்து) உருண்டு விழக் கூடியவையும் அவற்றில் உண்டு. (ஆனால், யூதர்களே! நீங்கள் தானாகவும் திருந்தவில்லை. நபிமார்களின் போதனைக்கும் செவிசாய்க்கவில்லை. அல்லாஹ்வுக்கும் பயப்படவில்லை.) உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.
الترجمة التاميلية
ثُمَّ قَسَتۡ قُلُوبُكُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَ فَهِيَ كَٱلۡحِجَارَةِ أَوۡ أَشَدُّ قَسۡوَةٗۚ وَإِنَّ مِنَ ٱلۡحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنۡهُ ٱلۡأَنۡهَٰرُۚ وَإِنَّ مِنۡهَا لَمَا يَشَّقَّقُ فَيَخۡرُجُ مِنۡهُ ٱلۡمَآءُۚ وَإِنَّ مِنۡهَا لَمَا يَهۡبِطُ مِنۡ خَشۡيَةِ ٱللَّهِۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ
இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன, அவை கற்பாறையைப்போல் ஆயின அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும், திடமாக அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை.
Jan Trust Foundation - Tamil translation
பிறகு, உங்கள் உள்ளங்கள் அதற்குப் பின்னர் இறுகிவிட்டன. அவை கற்களைப் போல் அல்லது இறுக்கத்தால் (அவற்றைவிட) மிகக் கடினமானவையாக உள்ளன. நிச்சயமாக கற்களில் நதிகள் பீறிடக்கூடியவையும் திட்டமாக உண்டு. நிச்சயமாக பிளந்து அதிலிருந்து நீர் வெளியேறக் கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு. நிச்சயமாக அல்லாஹ்வுடைய பயத்தால் (உருண்டு) விழக்கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு. அல்லாஹ் நீங்கள் செய்வதைப் பற்றி கவனமற்றவனாக இல்லை.
الترجمة التاميلية - عمر شريف