9. அவர்கள் (இவ்விதம் கூறி) அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டவர்களையும் வஞ்சிக்(கக் கருது)கின்றனர். ஆனால், அவர்கள் தங்களையே தவிர (பிறரை) வஞ்சிக்க முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
الترجمة التاميلية
يُخَٰدِعُونَ ٱللَّهَ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَمَا يَخۡدَعُونَ إِلَّآ أَنفُسَهُمۡ وَمَا يَشۡعُرُونَ
(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்;, ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.
Jan Trust Foundation - Tamil translation
(அவர்கள்) அல்லாஹ்வையும் நம்பிக்கையாளர்களையும் வஞ்சிக்கின்றனர்.தங்களையே தவிர (பிறரை) வஞ்சிக்க மாட்டார்கள். (இதை அவர்கள்) உணர மாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف