91. ‘‘அல்லாஹ் இறக்கிவைத்த (இ)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால் ‘‘எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டவற்றை (மட்டுமே) நம்பிக்கை கொள்வோம்'' எனக் கூறி அவற்றைத் தவிர உள்ள இ(ந்)த(க் குர்ஆ)னை நிராகரித்து விடுகிறார்கள். ஆனால், இதுவோ அவர்களிடமுள்ள (தவ்றாத்)தை மெய்யாக்கி வைக்கின்ற உண்மையா(ன வேதமா)க இருக்கிறது. (நபியே! அவர்களை நோக்கிக்) கேட்பீராக: ‘‘(உங்கள் வேதத்தை) உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (உங்களில் தோன்றிய) அல்லாஹ்வுடைய நபிமார்களை இதற்கு முன் நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?''
الترجمة التاميلية
وَإِذَا قِيلَ لَهُمۡ ءَامِنُواْ بِمَآ أَنزَلَ ٱللَّهُ قَالُواْ نُؤۡمِنُ بِمَآ أُنزِلَ عَلَيۡنَا وَيَكۡفُرُونَ بِمَا وَرَآءَهُۥ وَهُوَ ٱلۡحَقُّ مُصَدِّقٗا لِّمَا مَعَهُمۡۗ قُلۡ فَلِمَ تَقۡتُلُونَ أَنۢبِيَآءَ ٱللَّهِ مِن قَبۡلُ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
"அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள்" என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், "எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்" என்று கூறுகிறார்கள்; அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. "நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?" என்று அவர்களிடம் (நபியே!) நீர் கேட்பீராக.
Jan Trust Foundation - Tamil translation
"அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால் "எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டதை (மட்டுமே) நம்பிக்கை கொள்வோம்'' எனக் கூறுகிறார்கள். அதற்கு அப்பால் உள்ளதை நிராகரிக்கிறார்கள். அதுவோ அவர்களிடமுள்ள (தவ்றாத்)தை உண்மைப்படுத்தக்கூடிய உண்மையா(ன வேதமா)கும். (நபியே) கூறுவீராக: "(உங்கள் வேதத்தை உண்மையாகவே நம்பிய) நம்பிக்கையாளர்களாக நீங்கள் இருந்தால் அல்லாஹ்வுடைய தூதர்களை (இதற்கு) முன்னர் எதற்காகக் கொலை செய்தீர்கள்?
الترجمة التاميلية - عمر شريف