94. ‘‘(யூதர்களே!) அல்லாஹ்விடமிருக்கும் மறுமை(யின் சொர்க்க) வீடு (மற்ற) மனிதர்களுக்கு இல்லாமல் உங்களுக்கே சொந்தமென (கூறுகின்ற) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (உங்களுக்குச் சொந்தமான அவ்வீட்டிற்குச் செல்வதற்கு) நீங்கள் மரணத்தை விரும்புங்கள்'' என (நபியே!) கூறுவீராக.
الترجمة التاميلية
قُلۡ إِن كَانَتۡ لَكُمُ ٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ عِندَ ٱللَّهِ خَالِصَةٗ مِّن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُاْ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
(நபியே!) "இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது, வேறு மனிதர்களுக்குக் கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்" என்று (நபியே!) நீர் சொல்வீராக.
Jan Trust Foundation - Tamil translation
"(யூதர்களே) அல்லாஹ்விடம் (சொர்க்கமெனும்) மறுமை வீடு (மற்ற) மக்களுக்கு அன்றி உங்களுக்கு மட்டும் என்றிருந்தால், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை விரும்புங்கள்'' என (நபியே) கூறுவீராக.
الترجمة التاميلية - عمر شريف