97. ‘‘(உங்களில்) எவர் ஜிப்ரீலுக்கு எதிரி'' என (நபியே! யூதர்களை)க் கேட்பீராக. நிச்சயமாக அவர் இதை அல்லாஹ்வின் கட்டளைப்படியே உமது உள்ளத்தில் இறக்கி வைத்தார். இது தனக்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்துவதாகவும், நேரான வழியை அறிவிக்கக்கூடியதாகவும், நம்பிக்கை உடையவர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கிறது.
الترجمة التاميلية
قُلۡ مَن كَانَ عَدُوّٗا لِّـجِبۡرِيلَ فَإِنَّهُۥ نَزَّلَهُۥ عَلَىٰ قَلۡبِكَ بِإِذۡنِ ٱللَّهِ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ وَهُدٗى وَبُشۡرَىٰ لِلۡمُؤۡمِنِينَ
யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதி யாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது. இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
Jan Trust Foundation - Tamil translation
"(உங்களில்) யார் ஜிப்ரீலுக்கு எதிரியாகி விட்டார்? நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அதை அதற்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடியதாகவும், நேர்வழியாகவும், நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தியாகவும் உம் உள்ளத்தின் மீது இறக்கினார்'' எனக் கூறுவீராக!
الترجمة التاميلية - عمر شريف