91. தன் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப)வளை(யும் நீர் ஞாபக மூட்டுவீராக. நம் தூதர்) ஜிப்ரயீல் மூலம் அவளுடைய கர்ப்பத்தில் நாம் ஊதினோம். அவளையும் அவளுடைய மகனையும் உலகத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
الترجمة التاميلية
وَٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهَا مِن رُّوحِنَا وَجَعَلۡنَٰهَا وَٱبۡنَهَآ ءَايَةٗ لِّلۡعَٰلَمِينَ
இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்) எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
Jan Trust Foundation - Tamil translation
இன்னும் தனது மறைவிடத்தை பாதுகாத்துக் கொண்டவளையும் (-மர்யமையும்) நினைவு கூர்வீராக! நமது (-நாம் படைத்த) உயிரிலிருந்து அவளில் (-அவளுடைய மேலாடையின் முன்பக்க வழியில்) நாம் ஊதினோம். அவளையும் அவளுடைய மகனையும் அகிலத்தார்களுக்கு ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கினோம்.
الترجمة التاميلية - عمر شريف