39. ஆகவே, அவர் மாடத்தி(‘மிஹ்ராப்')ல் நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) வானவர்கள் சப்தமிட்டுக் கூறினார்கள்: (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் ‘யஹ்யா' (என்ற ஒரு மக)வை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகிறான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை (முன்னறிக்கையை) உண்மைப்படுத்திவைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார்.
الترجمة التاميلية
فَنَادَتۡهُ ٱلۡمَلَـٰٓئِكَةُ وَهُوَ قَآئِمٞ يُصَلِّي فِي ٱلۡمِحۡرَابِ أَنَّ ٱللَّهَ يُبَشِّرُكَ بِيَحۡيَىٰ مُصَدِّقَۢا بِكَلِمَةٖ مِّنَ ٱللَّهِ وَسَيِّدٗا وَحَصُورٗا وَنَبِيّٗا مِّنَ ٱلصَّـٰلِحِينَ
அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்;. அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.
Jan Trust Foundation - Tamil translation
ஆகவே, அவர் மாடத்தில் நின்று தொழுது கொண்டிருக்க அவரை வானவர்கள் அழைத்தார்கள்: "அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை உண்மைப்படுத்தக்கூடியவராக, தலைவராக, இன்பத்தைத் துறந்தவராக, நபியாக, நல்லோரைச் சேர்ந்தவராக யஹ்யா (என்ற ஒரு மக)வைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான்.''
الترجمة التاميلية - عمر شريف