134. அவர்கள் மீது (இவற்றில் ஒரு) வேதனை வரும்போதெல்லாம் அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! உம் இறைவன் (உங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பதாக) உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி (இந்த சிரமத்தை நீக்கும்படி) நமக்காக நீர் பிரார்த்தனை செய்யுங்கள். நமது சிரமத்தை நீங்கள் நீக்கினால் நிச்சயமாக நாங்கள் உம்மை நம்பிக்கை கொண்டு இஸ்ராயீலின் சந்ததிகளையும் நிச்சயமாக நாம் உம்முடன் அனுப்பி விடுகிறோம்'' என்று கூறுவார்கள்.
الترجمة التاميلية
وَلَمَّا وَقَعَ عَلَيۡهِمُ ٱلرِّجۡزُ قَالُواْ يَٰمُوسَى ٱدۡعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَۖ لَئِن كَشَفۡتَ عَنَّا ٱلرِّجۡزَ لَنُؤۡمِنَنَّ لَكَ وَلَنُرۡسِلَنَّ مَعَكَ بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ
தங்கள் மீது வேதனை ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் "மூஸாவே! உம் இறைவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! எங்களை விட்டும் இவ் வேதனையை நீர் நீக்கி விட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு இஸ்ரவேலர்களை உம்முடன் மேலும் நிச்சயமாக அனுப்பி விடுகிறோம்" என்று கூறினார்கள.
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் மீது வேதனை நிகழ்ந்தபோது, “மூஸாவே! உம் இறைவனிடம் -அவன் உம்மிடம் வாக்குறுதி கொடுத்ததைக் கொண்டு- எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக. எங்களை விட்டு வேதனையை நீர் நீக்கினால் நிச்சயம் உம்மை நம்பிக்கை கொள்வோம்; உம்முடன் இஸ்ரவேலர்களை நிச்சயம் அனுப்புவோம்“ என்று கூறினர்.
الترجمة التاميلية - عمر شريف