138. நாம் இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடத்தி (அழைத்து)ச் சென்ற சமயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தினர் அருகில் அவர்கள் சென்றபொழுது, (அதைக் கண்ணுற்ற அவர்கள் மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! அவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப் போல் எங்களுக்கும் ஒரு சிலையை (நாங்கள் வணங்குவதற்கு) ஆக்கிவைப்பீராக!'' என்று கூறினார்கள். அதற்கு (மூஸா அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார்.
الترجمة التاميلية
وَجَٰوَزۡنَا بِبَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ ٱلۡبَحۡرَ فَأَتَوۡاْ عَلَىٰ قَوۡمٖ يَعۡكُفُونَ عَلَىٰٓ أَصۡنَامٖ لَّهُمۡۚ قَالُواْ يَٰمُوسَى ٱجۡعَل لَّنَآ إِلَٰهٗا كَمَا لَهُمۡ ءَالِهَةٞۚ قَالَ إِنَّكُمۡ قَوۡمٞ تَجۡهَلُونَ
நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், "மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!" என்று வேண்டினர்; "நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்" என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்.
Jan Trust Foundation - Tamil translation
இஸ்ரவேலர்களை கடலைக் கடக்கவைத்தோம். தங்கள் சிலைகளுக்கருகில் (வழிபாட்டுக்காக) தங்கியிருந்த ஒரு சமுதாயத்தின் அருகில் (அவர்கள்) வந்தனர். “மூஸாவே! அவர்களுக்கு வணங்கப்படும் கடவுள்கள் (சிலைகள்) இருப்பது போல் எங்களுக்கும் வணங்கப்படும் ஒரு கடவுளை (சிலையை) ஏற்படுத்து” என்று கூறினர். “நிச்சயமாக நீங்கள் அறியாத சமுதாயம்.” என்று மூஸா கூறினார்.
الترجمة التاميلية - عمر شريف