28. (நம்பிக்கை கொள்ளாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்(யும் போது, அதைக் கண்ட எவரும் அவர்களைக் கண்டித்)தால், அவர்கள் ‘‘எங்கள் முன்னோர்களும் இவ்வாறு செய்யவே நாங்கள் கண்டோம். மேலும், இவ்வாறு (செய்யும்படியாகவே) அல்லாஹ்வும் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறான்'' என்று கூறுகின்றனர். (அதற்கு நபியே! அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான காரியங்களைச் செய்யும்படி ஏவவே மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை(ப் பொய்யாக)க்கூறலாமா?'' என்று கூறுவீராக.
الترجمة التاميلية
وَإِذَا فَعَلُواْ فَٰحِشَةٗ قَالُواْ وَجَدۡنَا عَلَيۡهَآ ءَابَآءَنَا وَٱللَّهُ أَمَرَنَا بِهَاۗ قُلۡ إِنَّ ٱللَّهَ لَا يَأۡمُرُ بِٱلۡفَحۡشَآءِۖ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ
(நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டால், "எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்" என்று சொல்கிறார்கள். "(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் - நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக.
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் ஒரு மானக்கேடானதைச் செய்தால், “எங்கள் மூதாதைகளை இதன் மீது (நாங்கள்) கண்டோம். இதை அல்லாஹ்வும் எங்களுக்கு ஏவினான்”என்று கூறுகின்றனர். “நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடானதை ஏவ மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை கூறுகிறீர்களா?” என்று (நபியே!) கூறுவீராக.
الترجمة التاميلية - عمر شريف